பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில், சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.