அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி.....துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயது இளைஞர் தற்கொலை
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யகிமா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடை ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 21 பேர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், இறந்த 3 பேரின் சடலங்களை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் 21 வயதான ஜேரிட் ஹாடோக் என்ற இளைஞர் தான் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தியவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. திடீரென போலீசுக்கு அழைத்த பெண் ஒருவர், தன்னிடம் ஒரு இளைஞர் செல்போனை வாங்கி, அவரது தாய்க்கு போன் செய்து, "தான் மக்களை கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும்" தெரிவித்துள்ளார்... உடனடியாக அப்பெண் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், காவல்துறையினர் வருவதற்குள் கொலை செய்த ஜேரிட் ஹாடோக் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.