டிக்கெட் எடுக்காத பயணியை கொடூரமாக தாக்கும் ரயில்வே ஊழியர்கள்... வெளியான அதிர்ச்சி வீடியோ
டிக்கெட் எடுக்காத பயணியை கொடூரமாக தாக்கும் ரயில்வே ஊழியர்கள்... வெளியான அதிர்ச்சி வீடியோ
பீகார் மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணி மீது தாக்குதல் நடத்திய டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஒரு ரயில் பயணி டிக்கெட் எடுக்காமல் இருந்ததால், ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அடித்து உதைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த இரண்டாம் தேதி மும்பையில் இருந்து பீகார் மாநிலம் ஜெய்நகர் செல்லும் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட இரு ரயில்வே ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்ததாக ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் தெரிவித்துள்ளார்.