"ஷூ தரேன் என்னோட நடந்து வாங்க" முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஷர்மிளா - பரப்பரப்பு பேட்டி
தெலங்கானாவில் மக்கள் பிரச்சனைகளை அறிந்து கொள்ள நடைபயணம் வருமாறு, முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சி தலைவர் ஷர்மிளா அழைப்பு விடுத்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடன் நடைபயணம் வரும் முதலமைச்சர் பயன்படுத்துவதற்கு 'ஷூ' தயாராக இருப்பதாக எடுத்துக் காட்டினார். மாநிலத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றால் அரசியலை விட்டு விலகுவதாக கூறிய ஷர்மிளா, அது உண்மை இல்லை என்றால், மக்களிடம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்டு பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.