கோர்டில் ஆஜராக வந்தவருக்கு அரிவாள் வெட்டு... நண்பனின் கொலைக்கு பழித்தீர்த்த பயங்கரம்...

Update: 2023-07-07 00:00 GMT

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் வளாகம்…

குற்றவாளி, காவல்துறை, பொதுமக்கள் என எப்போதும் பிசியாக இருக்கும் அந்த பகுதி அன்று வழக்கத்திற்கு மாறாக பதற்றத்துடன் காணப்பட்டது

ஜூஸ் கடை முன்பு கூடியிருந்தவர்களின் முகத்தில் மரண பயம் வெளிப்பட்டது.. என்ன நடந்ததென்று அறிய கூட்டத்தை விளக்கி கொண்டு உள்ளே நுழைந்தோம்.

தலையில் ரத்தக்காயங்களுடன் சரிந்து கிடந்த ஒரு குற்றவாளியை கண்டு நீதிமன்ற வளாகமே நடு நடுங்கி கிடந்தது.

வெட்டுக்காயங்களுடன் கிடந்தவர் தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த லோகேஷ். கொலை, கொலைமுயற்சி, அடிதடி கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை வாங்கி கொண்டு ஊருக்குள் உலா வந்த ஒரு பலே ரவுடி.

சம்பவம் நடந்த அன்று ஒரு குற்றவழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த லோகேஷின் மீது, ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறது.

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகமே குண்டு சத்தத்தில் ஸ்தம்பித்து கிடந்ததை அறிந்த போலீசார், லோகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது தான், நடந்தது பழிக்கு பழி தாக்குதல் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இரும்புலி பகுதியை சேர்ந்த ரவுடி பாலாஜி என்பவருக்கும் லோகேஷிற்கும் ஏரியாவில் யார் கெத்து என்பதில் போட்டி இருந்திருக்கிறது.

இதனால் இரண்டு தரப்பும் அடிக்கடி சண்டியிட்டு வந்திருக்கிறார்கள். லோகேஷ் தரப்பினர், பீர்க்கன்கரனை பகுதியில் வைத்து பாலாஜியை வெட்டி கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பாஸ்கரை ஏற்கனவே பாலாஜியின் நண்பரான விவேக் கூட்டாளிகளுடன் சென்று கொலை செய்திருக்கிறார். இந்த சூழலில் தான் அடுத்த டார்கெட்டாக லோகேஷுக்கு குறிவைத்திருக்கிறார்கள்.

பாலாஜியின் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற லோகேஷ், சமீபத்தில் தான் பினையில் வெளியே வந்திருக்கிறார்.

செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு லோகேஷ் வரும் தகவல் விவேக்கிற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்த நினைத்த விவேக் அவரது கூட்டாளிகளுடன் ஆயுதங்களோடு நீதிமன்ற வளாகத்தில் புகுந்து லோகேஷ் மீது வெண்டிகுண்டு வீசி சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக விவேக்கை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்ட நிலையில், விவேக்கை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்