அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - ஊராட்சி மன்றத் தலைவரின் செயலால் அதிர்ந்த பெண்

Update: 2022-09-28 10:35 GMT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி நியமன ஆணை வழங்கி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மீது பட்டதாரி பெண் புகார் கொடுத்துள்ளார். செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகள் அமலா, ஆசிரியர் பணிக்காக பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இவர், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஒத்திவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அருண் குமார் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், பொன்விளைந்த களத்தூர் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் இருந்து 6 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு பணி நியமன ஆணையை அருண்குமார் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அருண்குமாரின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்து அந்தப் பள்ளியில் சென்று காண்பித்தபோது அது, போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தன்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அமலா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்