அதே ட்ராக்... அதே ரயில்.. கோர விபத்து பகுதியில் மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. கோரமண்டல் ரயில் விபத்து காரணமாக 2 நாட்களாக ஒடிசா மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விபத்துப் பகுதியில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கோரமண்டல் ரயில் இன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டது. காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக இயக்கப்பட்ட நிலையில், ரயிலின் பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.