எஸ்பி ஆபிஸ் முன்பே சட்டக்கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த கேங் வார்.. ரவுண்டு கட்டிய ஆட்டோ டிரைவர்கள்
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, 20க்கும் மேற்பட்ட அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென சண்டையிட்டு கொண்டனர். இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மாணவர்களை விலக்க சென்றனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களின் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால், ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்களுக்குள் வகுப்பறையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி சாலையில் தாக்கி கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.