இல்லத்தரசிகளுக்கு ரூ.2000... யார் யாருக்கு..? - கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
கர்நாடக காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அந்தியோத்யா திட்டத்தின் கீழ் யார் குடும்ப தலைவி என குறிக்கப்பட்டுள்ளதோ,அவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை, மேல் உள்ள ரேஷன் அட்டைகள் என இரு கார்டுகளிலும் உறுப்பினராக உள்ள வயது மூத்த பெண்களுக்கே, இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள், வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் லஷ்மி ஹெபல்கர் தெரிவித்துள்ளார். 85 சதவிகித பெண்கள் இதன் மூலம் பலனடைவார்கள் என்றும், இனிமேல் பெயர் மாற்றம், இணைப்பு ஆகியவற்றை ரேஷன் கார்டுகளில் செய்ய முடியாது என்றும்
பெண்கள் இல்லாத குடும்பத்தில், வயது மூத்த ஆண்கள் குடும்ப தலைவர்களாக எடுத்து கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் லஷ்மி ஹெபல்கர் கூறியுள்ளார்.