ரூ.350 to ரூ.35 ஆயிரம்; 100% உயர்ந்த கடை வாடகை - உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய ஏலம்

மாதத்திற்கு 350 ரூபாய் மாத வாடகை செலுத்தி வந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் 35 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2022-06-02 08:24 GMT

மாதத்திற்கு 350 ரூபாய் மாத வாடகை செலுத்தி வந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் 35 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக சுமார் 400க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வாடகை நிலுவை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 244 கடைகளுக்கான ஏலம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் முதற்கட்டமாக ஒன்று முதல் 100 எண்கள் வரையுள்ள நபார்டு கடைகளுக்கான ஏலம் நடைப்பெற்றது.அப்போது ஒவ்வொரு கடையும் சுமார் 1200 முதல் 35 ஆயிரம் வரை மாத வாடகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாள் வரை 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட இந்த கடைகளுக்கு சுமார் 350 ரூபாய் மட்டுமே மாத வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 35ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகையாக ஏலம் எடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது




Tags:    

மேலும் செய்திகள்