"ஏதோ ஸ்கூலுக்குள்ள நடந்துருக்கு...என்ன வேதனையில் மேல ஏறுனானோ..." - கதறும் மாணவனின் உறவினர்

Update: 2025-01-07 12:14 GMT

நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த 17 வயது மாணவன், நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவர், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் தானாகவே மாடிக்கு சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், மாணவர் தானாகவே கீழே விழுந்து விட்டாரா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், பள்ளிக்குள் நடந்தது என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்