ரூ. 17 கோடி போதை பொருள் பறிமுதல்... மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் - சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பா?

Update: 2023-03-09 17:21 GMT

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்தனர். சந்தேகத்தின் பேரில், மும்பையை சேர்ந்த இளைஞரின் உடமைகளை சோதனை செய்த போது, விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 17 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு கிலோ 96 கிராம் அம்பெட்டமின் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். எதற்காக போதை பவுடர் கடத்தி வரப்பட்டது? சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்