சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த ராட்சத இரும்பு கம்பி.. தாய், மகள் உடல் நசுங்கி பலி
- மும்பையில் ஆட்டோவில் இருந்த போது இரும்புக்கம்பம் விழுந்த விபத்தில் 30 வயது பெண்ணும் 6 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்... வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஷாலியாக் மருத்துவமனை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
- கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் இருந்த இரும்பு கம்பம், ஆட்டோவில் சென்ற பெண் மற்றும் அவரது மகள் மீது விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது...