பர்த்டே பாய் கொடுத்த சாக்லேட்...20 நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்

Update: 2022-11-18 08:23 GMT

ராணிப்பேட்டை அருகே பிறந்தநாளுக்கு தரப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அரக்கோணம் அடுத்த சயனபுரத்தில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவன் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அங்குள்ள பெட்டிக்கடையில் இருந்து சாக்லேட் வாங்கி வந்து மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, தலை சுற்றல், மயக்கம் ஏற்படவே பரபரப்பானது. உடனே மருத்துவக்குழுவினர் பள்ளிக்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பள்ளிக்கு பெற்றோரும் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலாவதியான சாக்லேட்டா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்