நல்லாசிரியர் விருதுபெற்ற ராமநாதபுரம் ஆசிரியரை கைதுசெய்த சிபிஐ

Update: 2023-02-25 02:12 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ராமச்சந்திரன் என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் நிதி நிறுவனம் மூலமாக பலரது வருமானத்தை குறைவாக காண்பித்து, வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரரான பஞ்சாட்சரம் 12 லட்ச ரூபாயை வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.

மேலும், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை இருப்பதால் ராமச்சந்திரனை, சிபிஐ போலீசார் கைது செய்து 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்