ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
RRR படத்தை தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைந்து ஆக்ஷன் படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார்.
இதில் தோர் படத்தின் மூலம் சர்வதேச ரசிகர்களை கவர்ந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க ராஜமவுலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.