மழைநீர் சூழ்ந்துள்ளதால் சென்னை ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி தனித்தீவாக மாறியுள்ளது.
சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் தனித்தீவாக காட்சி அளிக்கிறது. பள்ளியை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்துடன் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.