சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து உள்ளது.சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ரஹானே தலைமையிலான மும்பையும், ரிஷி தவான் தலைமையிலான ஹிமாச்சலப் பிரதேசமும் மோதின. இதில் முதலில் ஆடிய ஹிமாச்சலப் பிரதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. பின்னர் 144 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை, 19 புள்ளி 3 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. சர்ஃப்ராஸ் கான் 36 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை, முதல் முறையாக சையது முஷ்டாக் அலி கோப்பையையும் கைப்பற்றியது.