கடலூரில் வீட்டுக்கு வீடு QR code

Update: 2023-07-12 02:23 GMT

கடலூர் மாநகராட்சியின் சேவைகளை பொது மக்கள் வீட்டிலே இருந்த படி பெற வீடு, வீடாக 'கியூஆர்' கோடு அட்டை ஒட்டும் பணி நடைப்பெற்றது.

மாநகராட்சியின் 44 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று கியூ ஆர் கோடு அட்டையை ஒட்டப்பட்டு வருகிறது. இந்த 'கியூஆர்' கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், ஆதார் எண், மின்சார எண், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு வீட்டில் இருந்த படியே தங்களது மொபைலில் 'கியூஆர்' கோடை ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம். இது தவிர குடிநீர் பிரச்சினை, கால்வாய் உடைப்பு, குப்பைகள் அள்ளாமல் இருப்பது, உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக 'கியூஆர்' கோடு ஸ்கேனில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்