மேடையிலேயே துணைவேந்தருடன் பாஜக எம்எல்ஏ கடும் வாக்குவாதம் - புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

Update: 2023-03-01 03:32 GMT
  • புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையிலேயே, பாஜக எம்.எல்.ஏ துணைவேந்தரிடம் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
  • இந்த விழாவில் எம்.பி, எம்.எல்.ஏக்களோடு சிறப்பு விருந்தினராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் பங்கேற்றார்.
  • விழா தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேலாக, ராகேஷ் அகர்வால் மட்டுமே பட்டங்களை வழங்கி வந்தார்.
  • இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அழைத்து அவமானப்படுத்தி விட்டதாக கூறி, மேடையிலேயே பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வாக்குவாதம் செய்தார்.
  • இதனால் பட்டமளிப்பு விழா சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பட்டங்களை வழங்குவார்கள் என துணைவேந்தர் அறிவித்ததால், மீண்டும் பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்