"ராகுல்காந்தியை திட்டமிட்டு"... "பிரதமருக்கு ஏன் சிறை தண்டனை வழங்கவில்லை?" - பிரியங்கா காந்தி ஆவேசம்
- பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- இதையடுத்து ஆவேசமாக பேட்டியளித்த பிரியங்கா காந்தி, அதானி விவகாரத்தில் பதில் சொல்ல விரும்பாமல், ராகுல்காந்தியை மத்திய அரசு திட்டமிட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- மேலும் தனது குடும்பத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி மீதோ, பாஜகவினர் மீதோ எந்த நீதிபதியும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
- இதற்காக நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியோடு சேர்ந்து நாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.