தனியார் நிதி நிறுவனம் அத்துமீறல்... கொடூர செயலில் ஈடுபட்ட ஊழியர்கள்

Update: 2023-06-15 02:09 GMT

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவரை, தனி அறையில் அடைத்து வைத்த நிதி நிறுவன ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் தினேஸ்வரன். இவர் இரு சக்கரவாகனம் ஒன்றை தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தவணை முறையில் கடன் பெற்று வாங்கி இருக்கிறார். 5 மாதங்கள் மட்டுமே தவணையை செலுத்திய தினேஸ்வரன், அதன் பின்பு தவணையை கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தினேஸ்வரனை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்தனர். இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவியையும் தனி அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை எச்சரித்து, தினேஸ்வரனையும் அவரது மனைவியையும் விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தினேஸ்வரனிடம் புகார் பெற்ற போலீசார், நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்