3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை...105 ஆண்டுகள் சிறை! - புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-02-07 07:20 GMT

புதுச்சேரியில், சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு, மற்றொரு வழக்கில் 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் உள்ள வாத்து பண்ணையில் பணியாற்றி வந்த மூன்று சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த பசுபதி என்ற இளைஞருக்கு 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கும் தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது.

ஏற்கனவே, வாத்து பண்ணையில் ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், பசுபதி உள்பட ஆறு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்