நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படைகள் பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறுகிறது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார். பின்னர் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, இளைஞர்கள் நாட்டின் மிகப் பெரும் வலிமையாக திகழ்வதாக குறிப்பிட்டார். இளைஞர்களின் திறன் மற்றும் திறமையை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
புதிய வாய்ப்புகள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்களை சென்றடைவதாக தெரிவித்த பிரதமர் விண்வெளி துறையை தனியார் துறைக்கு அனுமதித்ததின் பயன்களை இளைஞர்கள் பெற்று வருவதாக கூறினார்.