"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிளில் பயணம்" - மாசி மகத்தில் சுவாரஸ்யம்
- கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக, சைக்கிளில் அம்மன் சிலை கொண்டுவரப்படது, பலரையும் கவனத்தையும் ஈர்த்தது. கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவில் உள்ள மணலூர் மாரியம்மன் கோவில் அம்மன் சிலை, சைக்கிளில் அமர வைத்து, மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டது.
- அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிள் பயணம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.