சூடான் போரில் சிக்கி தவிக்கும் மக்கள் - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!

Update: 2023-04-21 04:18 GMT

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்து பேசினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர்,சூடானின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறினார். அதோடு G20 மற்றும் உக்ரைன் மோதல் பற்றி விவாதித்தாகவும் தெரிவித்தார். சூடானில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா.முயற்சிக்கிறது என்றும், அது மிக முக்கியமானது என்றும் கூறினார். போர் நிறுத்தம் இல்லாவிட்டால் பாதிப்பு அதிகமாகும் என்று கூறிய ஜெய்சங்கர்,உண்மையில் மக்கள் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என்றும் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்