ஊருணியை தூர்வார எதிர்ப்பு.. கையை அறுத்து கொண்ட ஊராட்சி மன்ற துணை தலைவர்
சிவகங்கை அருகே ஊரணியை தூர்வாரும் பணியை நிறுத்த கோரி ஊராட்சி மன்ற துணை தலைவர்
கத்தியால் கையை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்குளம் கிராமத்தில் உள்ள ஊரணியை தூர் வாரும் பணியை அதன் ஒப்பந்தக்காரர் துவக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சி துணை தலைவர் போஸ் என்பவர் தகராறு செய்ததோடு கையை கத்தியால் தானே அறுத்து கொண்டு போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.