'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' எச்சரிக்கை... விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை - ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மக்கள்
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து, உடைமைகள் சேதம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரமாக கனமழை கொட்டி வருவதால் வந்தனா டாக்கீஸைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மிதக்கின்றன. தானே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள பெத்யா மாருதி, பாஸ்கர் காலனி, கோட்பண்டரின் ஆனந்த் நகர் மற்றும் திவாவின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தானே, பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையையும், மும்பைக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் தானே ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையில் கூடியுள்ளனர்.