Friends-க்கு ரூ.11 லட்சம்..எனக்கு ரூ.52 லட்சம்..5 ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்..
சீனாவில், ஆன்லைன் விளையாட்டிற்காக ஒரு சிறுமி 52 லட்ச ரூபாயை செலவளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 13 வயதான சிறுமி, ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான நிலையில், தனது தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து, மொத்த பணத்தையும் பல்வேறு தவணைகளில் செலவளித்து விளையாடியுள்ளார். மேலும், அச்சிறுமி தனது நண்பர்களுக்கும் ஆன்லைன் விளையாட்டிற்காக, சுமார் 11 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளதாக, அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கு பின்னரும், அது குறித்த தகவல்கலை செல்போனில் இருந்து அழித்ததால், இது குறித்து தாங்கள் அறியவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது, தங்கள் வங்கிக் கணக்கில் 5 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளனர்.