'ஒரே நாடு ஒரே தேர்தல்'.. "குஜராத்தில் ஆட்சியை கலைப்பீர்களா?" - பாஜகவை அட்டாக் செய்த முரசொலி..!

Update: 2023-01-18 06:06 GMT

Full View




இது தொடர்பான இன்றைய முரசொலி நாளிதழ் தலையங்க கட்டுரையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என, மத்திய பாஜக அரசு கூறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில், அந்த அரசை கலைக்க போகிறார்களா?, அவ்வாறு கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதால் கூட தனியாக செலவாகிறது என்பதால், அதையும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுடன் நடத்த வேண்டியதுதானே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்றால், ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து ஆட்சியை கலைக்கும் நிலையில், அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்