ஓம்காரா நாட்டிய பள்ளியின் 5ஆவது பரதநாட்டிய அரங்கேற்ற விழா...நடிகை ஸ்ரீலேகா ராஜேந்திரன் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், ஓம்காரா நாட்டிய பள்ளியின் 5ஆவது பரதநாட்டிய அரங்கேற்ற விழா நடைபெற்றது. இங்கு பரதம் பயின்று வரும் ஏழு மாணவிகள், சலங்கை அணிந்து உற்சாகத்துடன் நடனமாடி அசத்தினர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகை ஸ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஏழு மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இவ்விழாவில், மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.