அதிகரிக்கும் புதிய கொரோனா - மத்திய அரசு சொன்ன தகவல்
மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பாரதி பிரவீன் பவார் கலந்து கொண்டு, வாஜ்பாயின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செந்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றார். இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், புதிய வகை கொரோனா தொற்றைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார். விழாவில், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பாஜக எம்.பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.