புதுச்சேரி அமைச்சரை ஏமாற்ற நாடகம் நடத்திய அதிகாரிகள்

Update: 2022-09-16 07:01 GMT

புதுச்சேரி குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன் காரைக்கால் சென்றுள்ளார். அப்போது, மத்திய அரசின் பல்நோக்கு திறமை பயிற்சி மையத்தில் திடீரென ஆய்வுக்கு சென்ற நிலையில், சுமார் 209 பேர் பயிற்சி பெறவேண்டிய இடத்தில் 9 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மேலும், கருவிகளை பழுது நீக்க சூடேற்ற பயன்படும் எரிவாயு அடுப்பை, எரிவாயு சிலிண்டர் இல்லாமல் ஒப்பிற்காக வைத்திருத்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சாய் சரவணன், அதிகாரிகளிம் கேள்வி எழுப்பி உள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, கோப்புகளுடன் புதுச்சேரிக்கு வரும்படி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்