- அமெரிக்கா - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,ஞாயிறு அன்று காலை மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருநாடுகளையும் மிரட்டியுள்ளது, வட கொரியா.
- இந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் இருந்து ஏவப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகமும், தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தின.
- அமெரிக்கா - தென் கொரியாவிற்கு இடையேயான ராணுவ ஒத்திகை தொடங்கப்பட்ட பிறகு வட கொரியா நடத்தும் மூன்றாவது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.