இன்றைய தலைப்பு செய்திகள் (01-02-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-01 15:43 GMT

"வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம்"

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு...

தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பால், விலை உயர வாய்ப்பு...

பட்ஜெட் - ஆதரவும், எதிர்ப்பும்

இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என பிரதமர் மோடி பெருமிதம்...

தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் இல்லை... ஏமாற்றமளிக்கும்

பட்ஜெட் என முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்...

100 நாள் வேலை, பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்து பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் குற்றச்சாட்டு...

வேட்பாளர் அறிவிப்பில் போட்டா போட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், ஈபிஎஸ் தரப்பில் தென்னரசு போட்டி...

தங்கள் தரப்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு....

பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை திரும்பப் பெறுவோம் எனவும் பேட்டி...

"இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு"

இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு உள்ளதாக, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கருத்து...

ஈபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்...

5,351 பள்ளி வகுப்பறைகள் - அடிக்கல்

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் தொடக்கமாக, வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...

784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்...

"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல்..."

பேனா நினைவுச்சின்னத்தை உடைக்கும் வரை, எங்கள் கைகள் பூப்பறிக்குமா? என சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி...

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நினைவு சின்னம் அமைக்க முனைப்பு காட்டுவது ஏன் என அண்ணாமலை கேள்வி...

சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை இன்று விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்