'பதான்' படத்திற்கு புதிய சிக்கல் , தணிக்கை குழு கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்

Update: 2022-12-29 14:40 GMT

நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள 'பதான்' படத்தில் சில காட்சிகளை திருத்தம் செய்யுமாறு தணிக்கைக் குழு அறிவுறுத்தியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலில் நாயகி தீபிகா படுகோனே காவி உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், படத்தில் சில காட்சிகளில் மாற்றங்களை செய்யுமாறு மத்திய திரைப்பட தணிக்கைக்குழு தலைவர் பிரசூன் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். படத்தை வெளியிடுவதற்கு முன்பு திருத்தப்பட்ட பதிப்பை சமர்பிக்குமாறு தயாரிப்பாளருக்கு வழிகாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்