அலேக்காக தூக்கி நிறுத்தப்பட்ட வீடு.. ஆச்சர்யமாய் பார்த்து செல்லும் மக்கள் - மாஸ் காட்டும் விவசாயி..!

Update: 2022-10-12 05:59 GMT

பழனி அருகே, விவசாயி ஒருவர் பள்ளத்தில் இருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்தி வருவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சச்சிதானந்தத்தின் வீட்டை சுற்றியுள்ள சாலை உயர்த்தப்பட்டதால் மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து வந்துள்ளது.

இதனால் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு சச்சிதானந்தம் முற்பட்டபோது கட்டிட பொறியாளர் அறிவுரையின் பேரில் பழைய வீட்டை இடிக்காமல் லிப்டிங் முறையில் உயர்த்த முடிவு செய்துள்ளார்.

வீட்டின் கீழ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிகளை வைத்து அதனை மேலே உயர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பழைய வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்துவதால் புதிய வீடு கட்டுவதற்கு ஏற்படக்கூடிய செலவு மற்றும் நேரம் குறையும் என்று சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்துவதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்