நகராட்சி அலுவலகத்தில் நிர்வாண சாமியார்கள் - மண்டியிட்டு ஆசி பெற்ற ஊழியர்கள்

Update: 2023-05-15 09:11 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்கு நிர்வாண சாமியார்களை அழைத்து வந்து, நகராட்சி ஊழியர்கள் ஆசி பெற்றது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. காங்கேயம் நகராட்சி 2-வது வார்டு பாஜக பொறுப்பாளர் அசோக்கும், திமுக பொறுப்பாளர் சரவணனும் நண்பர்கள் எனத் தெரிகிறது. இவர்கள் கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்திற்கு நிர்வாண சாமியார்களை அழைத்து வந்துள்ளனர். சாமியார்களிடம் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் மண்யிட்டு ஆசி பெற்றது தொடர்பான புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்