நடுராத்திரியில் கடைக்குள் புகுந்து ஓனரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் ரத்தத்தில் மூழ்கும் மளிகை கடை

Update: 2023-05-19 10:25 GMT

சிவகங்கையில் மளிகை கடை உரிமையாளரை கடைக்குள் புகுந்து மூவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை, மஜித் ரோடு அருகே 30 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருபவர் மனோபாலா. இவர் சம்பவத்தன்று, கடைக்குள் அரிவாளால் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், மனோபாலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அழகு பாண்டி மற்றும் அனுப்பாண்டி உட்பட மூவர் மனோபாலாவிடம் பணம் கேட்டு தகராறு செய்ததும், தர மறுத்த அவரை அரிவாளால் வெட்டி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்