"1937க்கு முன் இந்து சட்டத்தை பின்பற்றிய இஸ்லாமியர்கள்..!" ஷரியத் சட்டம் தான் இந்தியாவை துண்டாடியதா..? - 'துக்ளக்' குருமூர்த்தியின் கருத்தும்- பின்னணியும்

Update: 2023-07-11 08:13 GMT

1937 ஷரியத் சட்டமே இந்தியாவை துண்டாடியது, அதற்கு முன்பு இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்து சட்டத்தையே பின்பற்றினார்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்திருக் கிறார். இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன...? என்பதை விவரிக்கும் ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

பொது சிவில் சட்டம் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து, தேசிய அரசியலில் அதுகுறித்த விவாதம் தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில் ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியிருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, 1937 ஷரியத் சட்டமே பாரதத்தை துண்டாடியது என குறிப்பிட்டுள்ளார்.

அதில் 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, தொடர்ந்து மதம் மாறியவர்கள், உள்ளூர் இந்து பழக்கவழக்கங்களையே பின்பற்றினார்கள். மதம் மாறியவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றிய பழக்கவழக்கத்தில், 1937 ஆம் ஆண்டு மாற்றம் திணிக்கப்பட்டது.

1937 அக்டோபரில் ஷரியத் சட்டத்தை முஸ்லிம் லீக் இந்தியாவில் கொண்டுவந்தது. இஸ்லாமியர்களை பிரிக்க விரும்பிய ஜின்னா, ஆங்கிலேயர்களுடன் கரம் கோர்த்து ஷரியத் சட்டம் கொண்டுவந்தார்.

1940 மார்ச்சில் லாகூர் பிரிவினை தீர்மானத்தை ஜின்னா நிறைவேற்றினார்; ஷரியத் சட்டமே 1947- இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது என கூறியுள்ளார்.

1937 ஷரியத் சட்டம் வருவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் இந்துக்கள் சட்டத்தையே பின்பற்றினார்கள் என குறிப்பிட்டுள்ள குருமூர்த்தி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு

44 வாயிலாக இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ரத்து செய்ய விரும்பிய ஷரியத் சட்டம் இப்போது போலி மதச்சார்பற்றவர்களால் இஸ்லாமியர் மத உரிமை என போற்றப்படுகிறது என விமர்சனம் செய்துள்ளார். பொது சிவில் சட்டமே வரலாற்று தவறை சரிசெய்யும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்