2047ம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும்?" வியப்பூட்டும் முகேஷ் அம்பானியின் கணிப்பு

Update: 2022-11-23 06:32 GMT

2047ல் இந்திய பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சியை எட்டும் என பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அடுத்த,10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்திகளாக மாசு ஏற்படுத்தாத புரட்சி, பயோ எனர்ஜி புரட்சி, மற்றும் டிஜிட்டல் புரட்சி ஆகியவை இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்