3 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய தாய், மகன்... கணவனையே வீட்டுக்குள் சேர்க்க பயம் - வெளி உலகையே பார்க்க விடாத அச்சம்
- கொரோனா குறித்த அதீத பயத்தால், மூன்று ஆண்டுகளாக தனது மகனுடன், வீட்டைப் பூட்டிக் கொண்டு தனிமையில் இருந்த பெண்ணை, கணவர் அளித்த புகாரில் போலீசார் கதவை உடைத்து அதிரடியாக மீட்டனர்.
- குருகிராம் அடுத்த சக்கர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மாஜி.
- தனியார் நிறுவன என்ஜினியரான இவர், சக்கர்பூர் காவல்நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை பதிவு செய்தார்...
- அதில், தனது மனைவி கொரோனா பரவல் குறித்து அதீத பயத்தில் இருப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியே சென்றால், தனது மகன் இறந்துவிடுவார் என கருதி, மூன்று ஆண்டுகளாக பூட்டிய வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்....
- இதைக் கேட்டு திடுக்கிட்ட போலீசார்... பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, சுஜன் மாஜியின் மனைவி மற்றும் மகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
- முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, அலுவலகத்திற்கு சென்ற அவரது கணவரைக்கூட வீட்டிற்குள் அந்த பெண் அனுமதிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வீடியோ கால் மூலமே, மனைவியை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
- போலீசார் நடத்திய ஆய்வில், ஆடைகள், மளிகைப்பொருட்கள் மற்றும் குப்பைகளை வீட்டின் மூலையில் குவித்திருந்த அந்த பெண், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விட்டதும் தெரியவந்தது.
- இந்நிலையில், மீட்கப்பட்ட பெண்ணிற்கு மனநல பரிசோதனை மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.