Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-16 00:54 GMT

"எரிசக்தி விநியோகத்திற்கு கட்டுப்பாடு கூடாது..."

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்...


ஜி-20 மாநாட்டுக்கு மத்தியில் உலக நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு...

அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின் ஜின்பிங் உடனான சந்திப்பில் நெகிழ்ச்சி... 


தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி...


தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்...

தொகுதி சார்ந்த கோரிக்கை அடங்கிய மனு அளிப்பு...


சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்...

உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டதால் அதிர்ச்சி...


வரும் ஐபிஎல் தொடரில், சி.எஸ்.கே. அணியில் இருந்து 9 வீரர்கள் விடுவிப்பு...

பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், உத்தப்பா, ஜோர்டன் உள்ளிட்ட 9 வீரர்களை விடுவித்தது நிர்வாகம்...

Tags:    

மேலும் செய்திகள்