மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி..நம்பரில் இருந்து பெண் பேசியதால் அதிர்ச்சி

Update: 2022-08-25 12:22 GMT

மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி..நம்பரில் இருந்து பெண் பேசியதால் அதிர்ச்சி


மதுரை மாநகராட்சி ஆணையரின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணிபுரிந்து வருகிறார். இவர் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கிய மர்ம நபர் ஒருவர், உதவி ஆணையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில் பெண் ஒருவர் அந்த எண்ணில் பேசியதும், மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் இது போன்ற மோசடி நடைபெற்றதும் தெரியவந்தது. ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் பெயரில் மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில் இப்போது மதுரை மாநகராட்சி ஆணையரின் பெயரிலும் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்