பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்துள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் அளித்த புகாரில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை பெண்களுடன் நெருங்கி பழகும் காதல் மன்னன் போல பொய்யாக சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில் உள்ள உண்மையான வரலாற்றை மறைத்து தவறான காட்சிகளை அமைத்த இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.