மந்தி குரங்குகள் - ஆபத்தா? குரங்கு கடித்தால் என்னவாகும்..? - மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்

Update: 2023-02-23 02:59 GMT
  • நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வடக்கு அகஸ்தியர்புரம் பகுதிகளில் மந்தி வகை குரங்குகள் கும்பலாக உலவி வந்துள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் 16 வயதுமகன் கவினை குரங்குகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, மாணவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கே சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
  • இதன் அடிப்படையில், கடையம் வனச்சரக அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகளை வைத்தனர். அப்போது அந்த கூண்டில் 2 குட்டிகள் உட்பட 16 மந்தி வகை குரங்குகள் சிக்கின....
  • இது போல், கூண்டுகள் வைத்து தொடர்ந்து குரங்குகள் பிடிக்கப்படும் என தெரிவித்த வனத்துறையினர், பிடிபட்ட குரங்குகளை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
  • இந்த மந்தி வகை குரங்குகள் நீலகிரி மற்றும் பழனி மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்றும், கர்நாடகாவின் குடகு மலை, கேரளாவின் ஏலக்காய் மலைகளிலும் அதிகமாக காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
  • இந்நிலையில், குரங்கு கடி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கும் மருத்துவர்கள், குரங்கு கடிக்கு 4 வகையான ஊசிகள் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
  • குரங்கு கடிக்கென தனியாக தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால், குரங்கு கடித்தால் அதை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர்...
Tags:    

மேலும் செய்திகள்