மூதாட்டிகளை Target செய்த நபர்..பாலியல் வன்கொடுமை செய்து நகைகள் கொள்ளை..நாமக்கல் அருகே பரபரப்பு

Update: 2023-05-21 11:34 GMT

கடந்த மார்ச் மாதம், பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த பாவாயி என்ற மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகை கொள்ளை போனது. அதேபோல், கடந்த 12-ம் தேதி, பள்ளிபாளையத்தில், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பழனியம்மாள் என்ற மூதாட்டியை பாலியல் வனகொடுமை செய்து தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. இருகொலைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபரின் பெயர் செல்வம் என்பதும், மூதாட்டிகளை நகைக்காக கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்