வரதட்சணை கொடுமை வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி - விமான நிலையத்தில் கைது

Update: 2023-01-02 10:14 GMT

வரதட்சணை கொடுமை வழக்கில், ஓராண்டாக கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த இளைஞர், சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அஜித் ஜோசப் என்பவர் மீது, கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்ததது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் வந்த கேரள போலீசார், அஜித் ஜோசப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்