மருத்துவரும் இல்லை ,செவிலியரும் இல்லை.. சிறுமிக்கு தவறாக மாட்டப்பட்ட குளுக்கோஸ்..! வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2023-01-15 03:41 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்காக சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்... சிறுமிக்கு டெங்கு அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், உள்நோயாளியாக சிறுமி சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சிறுமிக்கு குளுக்கோஸ் ஏற்ற செவிலியர் ஒருவர் ஊசி குத்தியுள்ளார்.

சிறிது நேரத்தில் குளுக்கோஸ் பாட்டிலை அந்த வார்டில் இருந்த தூய்மை பணியாளர் சிறுமியின் கையில் மாட்டியுள்ளார்.

ஆனால் குளுகோஸ் சரியாக இறங்காமல் சிறுமி வேதனையில் அழுத நிலையில், அங்கு பணியாற்றிய மற்றுமொரு தூய்மை பணியாளர் வந்து, பாட்டில் தவறாக மாட்டப்பட்டுள்ளதால் தான் குளுக்கோஸ் இறங்கவில்லை என்று கூறி தானே குளுக்கோஸ் டியூபை சரி செய்துள்ளார்...இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, தலைமை மருத்துவ அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என்றும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்