ஒரே நேரத்தில் 10 பேரை தாக்கிய எய்ட்ஸ் - டெஸ்ட்டில் வெளிவந்த அதிர்ச்சி.. திகில் பின்னணி
கேரளாவில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்ட 10 பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் நடத்திய சோதனையில் இளைஞருக்கு எய்ட்ஸ் நோய் உறுதி செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் போதைப் பொருள் பயன்படுத்தும் அவரது கூட்டாளிகளை கண்டுபிடித்து அவர்களையும் பரிசோதித்தனர். இதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உட்பட மேலும் 9 பேருக்கு எய்ட்ஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் அனைவரும் போதை ஊசி போடுவதற்கு ஒரே சிரஞ்சை பயன்படுத்தியது தெரியவந்தது. 10 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.